Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் நேரத்தில் தாக்குதல் நடத்துவோம் – தலிபான்கள் எச்சரிக்கை

தேர்தல் நேரத்தில் தாக்குதல் நடத்துவோம் – தலிபான்கள் எச்சரிக்கை
, புதன், 7 ஆகஸ்ட் 2019 (13:04 IST)
ஆப்கானிஸ்தானில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தாக்குதல் நடத்த இருப்பதாக தலிபான்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. தலிபான்கள் தாக்குதல்களால் ஏற்கனவே இந்த தேர்தல் இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அழைத்தது. ஆனால் அவர்கள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளோடு பேச மறுத்தனர்.

இதனால் கத்தாரில் தலிபான் தலைவர்களோடு அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் தலிபான்களை அழிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள 5000 அமெரிக்க ராணுவ வீரர்களை திரும்ப பெற்று கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த 2001 ம் ஆண்டு அமெரிக்காவில் தலிபான்கள் இரட்டை கோபுரத்தை தாக்கிய சம்பவத்துக்கு பிறகு தலிபான்களை அழிப்பதை அமெரிக்கா நோக்கமாக கொண்டது. அவர்கள் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்ததால் நேட்டோ படைகள் 18 ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தலிபான்களோடு சமரசமாக போவதற்கு அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் இந்த சமயத்தில் “தேர்தல் ஊர்வலங்களில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம். தேர்தல் நேரத்தில் கூடும் கூட்டங்கள், ஊர்வலங்களில் நாம்மாட்கள் தாக்குதல் நடத்தினால் ஏற்படும் உயிர்சேதத்தை தவிர்க்க அங்கு போகாமல் இருப்பதே நல்லது” என தலிபான் தெரிவித்திருந்தது. தற்போது இந்த அமைதி பேச்சு வார்த்தையால் தங்களது முடிவுகளை மாற்றி கொள்வார்களா என்பது குறித்து ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பேசி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொத்த வாங்கி குவிப்பானுங்க... திமுகவை பங்கமா கலாய்த்த ஜெயகுமார்!