Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் ஒரு அம்மா உணவகம்.. 18 டாலருக்கு அன்லிமிட் நான்வெஜ் உணவு..!

Advertiesment
amma kitchen
, சனி, 11 மார்ச் 2023 (16:13 IST)
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகம் தொடங்கினார் என்பதும் மிக குறைந்த விலையில் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இங்கு உணவுகள் விநியோகம் செய்யப்படுகிறது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் அமெரிக்காவில் வெறும் 18 டாலருக்கு அன்லிமிடெட் அசைவ உணவுகளை சாப்பிடலாம் என்று புதிதாக ஒரு உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் இந்த உணவகம் உள்ளது என்றும் இந்திய உணவுகளை தேடுபவருக்கு இந்த அம்மாஸ் கிச்சன் உணவகம் நல்ல சாய்ஸ் என்றும் கூறப்படுகிறது. 
 
கல்யாண விருந்துக்கு வைப்பது போல் டைனிங் டேபிள் வைக்கப்பட்டுள்ளது என்றும் வாழை இலை போட்டு அங்கு உணவு பரிமாறுகிறார்கள் என்றும்  ஏராளமான அசைவ உணவுகள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் எவ்வளவு வேண்டுமானாலும் 18 டாலர் கொடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் குமார் என்ற இந்தியர் தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'முதலமைச்சர் ஆசையில் கட்சி தொடங்கியவர்கள் அனாதையாக உள்ளனர்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்