அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்அமல்படுத்திய பரஸ்பர வரி விதிப்பு முறையை அமெரிக்க மாகாணங்களே எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியெற்ற டொனால்டு ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்து பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்தினார். இதனால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், விலைவாசி ஏற்றத்தால் அமெரிக்க மக்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில்தான் ட்ரம்ப்பின் தேசிய வர்த்தக கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் ஓரேகான், அரிசோனா, கொலராடோ, இல்லினாய்ஸ், மினசோட்டா, நெவேடா, நியூயார்க் உள்ளிட்ட 12 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
அதில் அதிபர் ட்ரம்ப் வகுத்துள்ள கட்டணக் கொள்கை சட்டவிரோதமானது என்றும், அமெரிக்க பொருளாதாரத்தை குழப்பத்தில் தள்ளுவதாகவும் கூறியுள்ளனர். வரிகளை விதிக்க பாராளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தில் வரிகளை உயர்த்த உண்மையாகவே அவசரநிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், ட்ரம்ப்பின் வரிவிதிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K