எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவன பங்குகள் சரிந்த நிலையில் அவர் அமெரிக்க அரசின் பொறுப்புகளில் இருந்து விலக உள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நிலையில், அவரது நண்பரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தலைமையில் டாட்ஜ் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் நிதி பிரச்சினையை குறைக்க உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு அரசு பணியாளர்களை குறைத்தல் உள்ளிட்ட செயல்படுகள் மூலம் பல ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவினத்தை குறைத்துள்ளது.
ஆனால் அதேசமயம் எலான் மஸ்க் மீது மக்கள் வெறுப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று மட்டுமே 20 சதவீத பங்குகள் சரிந்த நிலையில் எலான் மஸ்க் தனது டாட்ஜ் தலைவர் பதவியை விட்டுவிட்டு தனது டெஸ்லா நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்க உள்ளார். விரைவில் அமெரிக்க அரசின் பொறுப்புகளில் இருந்து விலக உள்ளதாக அவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K