Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கழிவு நீரை சுத்தமாக்கும் நெற்பயிர் – அமெரிக்க விஞ்ஞானி ஆச்சர்யத் தகவல்

Advertiesment
கழிவு நீரை சுத்தமாக்கும் நெற்பயிர் – அமெரிக்க விஞ்ஞானி ஆச்சர்யத் தகவல்
, திங்கள், 10 டிசம்பர் 2018 (09:11 IST)
வேளாண்மைக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொள்ளிகளால் உருவாகும் கழிவுநீரை நெற்பயிர்கள் சுத்தம் செய்வதாக அமெரிக்க விஞ்ஞானி கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வேளாணமைக்காகப் பயன்படுத்தும் ரசாயண உரங்களால் வேளான் நிலங்கள் பாதிப்படைவது குறித்தும் அவற்றை சுத்திகரிப்பது குறித்தும் நீண்ட நாட்களாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அதற்கான புதியத் தீர்வைக் கண்டுள்ளதாக அமெரிக்க வேளாந்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள அமெரிக்க அரசின் வேளாண் துறை மூத்த விஞ்ஞானி மேட் மூர் நெற்பயிர்கள் ரசாயணக் கழுவுகளை சுத்திகரிக்கும் தன்மைக்  கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

’விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரை சுத்திகரித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், இதர தாவரங்களுக்கு பாதிக்காத பயிர் எது என்ற ஆராய்ச்சியை  நீண்டகாலமாக நடத்தி வருகிறோம். இப்போது அதற்கான விடையைக் கண்டு பிடித்துள்ளோம். நெற்பயிர் ரசாயணக் கழிவுகளை சுத்தப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது.

பண்ணைகளில் இருந்து வெளியேறும் பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் கலந்த கழிவுநீர் ஆறு, ஏரிகளில் கலக்கிறது. இந்த கழிவுநீர் கால்வாய்களில் நெற்பயிர்களை வளர்த்தோம். வேறு சில கால்வாய் களில் இதர செடிகளை வளர்த்தோம். நான்கு பண்ணைகளில் சுமார் 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தினோம்.

இதில் நெற்பயிர் வளர்க்கப்பட்ட கால்வாய்களில் 85 சதவீதம் முதல் 97 சதவீதம் வரை ரசாயன கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அமெரிக்க விவசாயிகள், தங்களது பண்ணைகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் நெற்பயிர்களை வளர்க்க அறிவுறுத்தியுள்ளோம். இந்த நெற்பயிரை உணவுக்காகவும் பயன்படுத்தலாம்.’.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேரலையில் சரமாரியாக அடித்துக் கொண்ட கட்சி பிரமுகர்கள்: போர்க்களமான விவாத மேடை