Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்ஜெட் விலையில் இரட்டை கேமரா ஸ்மார்ட் போன் : இளைஞர்களின் சாய்ஸ் இது!

Advertiesment
பட்ஜெட் விலையில் இரட்டை கேமரா ஸ்மார்ட் போன் : இளைஞர்களின் சாய்ஸ் இது!
, வியாழன், 6 டிசம்பர் 2018 (13:43 IST)
கவர்ச்சியான புதுரக ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்வதில் மெய்சூ நிறுவனம் எப்போதும் முதலிடத்தில் உள்ளது. தற்போது மெய்சூ நிறுவனத்தின் இப்புது ஸ்மார்ட் போனில் பிரைமரி கேமரா, முழு ஸ்கிரீன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் எம்6 டிஸ்மார்ட் போன் நம்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 5.7 இன்ச் எச்.டி.பிளஸ் 2.5.D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன் 1.5 ஜிகாகெர்ட்ஸாக்டா -கோர் மீடியா டெக் எம் டி 6750 பிராசசர் , ஆன்டிராய்ட் 8.1 ஒரியோ இயங்குசேவை போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
 
இதில் 13 எம்பி . கைரேகை சென்சார், 3300 எம்.ஏ பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.முக்கிய சிறப்பம்சமாக 4ஜி வோல்ட் உள்ளது. டூயல் சிம் வசதியும் கொண்டுள்ளது.  அவரச தேவைகளூக்கு உதவும் வண்ணமும், திடீரென்று ஒரு நெட்வொர்க்  டவர் இல்லையென்றால் மற்றொரு சிம்மில் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
 
மெய்சூ எம் 6டி ந் சந்தை விலை நம் நாட்டில் ரூ 7999 என இந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் என்றால் ரூ. 2200 ருபார் கேஷ் பேக் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இதன் ஸ்மார்ட் போன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் மெய்சூ நிறுவனம் அதிரடி விலை குறைப்பு மற்றும் கேஷ் பேக் ஆப்பர் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல் ஜெயராமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் செய்தி...