Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏசி பஸ் கட்டணம் குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி!

Advertiesment
ஏசி பஸ் கட்டணம் குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி!
, வெள்ளி, 7 டிசம்பர் 2018 (19:39 IST)
தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் புதிய ஏசி பேருந்துகளை அறிமுகம் செய்தது. இந்த பேருந்து கட்டணம் தற்போது 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 
 
தமிழக அரசு 34 ஏசி படுக்கை வசதி பேருந்துகள், 10 அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள் (கழிவறை வசதி கொண்டது), ஏசி இல்லாத 2 படுக்கை வசதி பேருந்துகள், 6 ஏசி படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் என 52 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது.
 
இந்நிலையில், அரசு ஏசி பேருந்துகளில் 10% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.40 முதல் ரூ.150 வரை கட்டணம் குறைந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 
இதற்கு முன்னர் சில வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகளை விட அரசு ஏசி பேருந்துகளில் 15% வரை கட்டணம் அதிகமாக இருந்தது. இதனால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடம் அதிருப்தி எழுந்தது. 
 
இதையடுத்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களை தவிர, மற்ற நாட்களில் பேருந்து கட்டணத்தில் 10% குறைக்கப்படடும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள், ஏசி இல்லாத படுக்கை வசதி இல்லாத பேருந்துகளில் கிமீ 10 பைசா குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று விஜயகாந்த் இன்று ஸ்டாலின் நாளை யாரோ? வைகோ ராசி அப்படி...