உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பெஸோஸ் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தற்போது செல்போன்கள் ஹேக் செய்வது என்பது ஹேக்கர்களுக்கு சர்வசாதாரண நிலையாக இருந்தாலும் உலகின் முக்கிய விவிஐபிக்களின் செல்போன்கள் தகுந்த பாதுகாப்புடன் இருப்பதால் அந்த செல்போன்களை ஹேக் செய்வது என்பது மிகவும் கடினம்
ஆனால் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஜெஃப் பெஸோஸ் செல்போன் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது செல்போனை சவுதி அரேபிய அரசின் உதவியுடன் ஹேக்கர்கள் ஹேக் செய்யப்பட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது
அமெரிக்காவின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான ’வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகையையும் அமேசான் நிறுவனருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பத்திரிகையில் சமீபத்தில் சவுதி அரேபியா இளவரசர் குறித்த சர்ச்சைக்குரிய செய்திகள் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஜெஃப் பெஸோஸ் மீது கடும்கோபம் கொண்ட சவூதி அரசு அவருடைய செல்போனை ஹேக் செய்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்துள்ளது
மேலும் ஜெஃப் பெஸோஸ் செல்போனிலிருந்து அந்தரங்க புகைப்படங்களை சவுதி அரசு ஹேக் செய்துள்ளதாக ஒரு வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த தகவலை சவுதி அரேபிய அரசு மறுத்துள்ளது. ஜெஃப் பெஸோஸ் செல்போனை ஹேக் செய்ய வேண்டிய அவசியம் சவுதி அரேபியா அரசுக்கு இல்லை என்றும் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது