Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் ஆப்கானிஸ்தான்.. பாலைவனம் ஆகிறதா பாகிஸ்தான்?

Siva
புதன், 21 மே 2025 (07:45 IST)
இந்தியாவிற்கு பிறகு, இப்போது ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கு செல்லும் நீர்வரத்தை குறைக்க அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசும் பாகிஸ்தான் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஜெனரல் முபின், பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை தடுத்து வைக்க, காபூல் அரசுக்கு அணைகள் கட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என்று மீர் யாப் பாலூச் தகவல் வெளியிட்டுள்ளார்.
 
காபூல் நதியின் துணைநதியாகிய குனார் நதி, ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்குள் பாய்கிறது. இது பாகிஸ்தானுக்கு முக்கியமான நீர்வழியாக கருதப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு புதிய சங்கடம் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
 
ஏற்கனவே சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்துள்ள நிலையில் புதிய அணைகள் கட்டவும் திட்டமிட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தானின் விவசாயம் பாதிப்பதோடு பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது ஆப்கானிஸ்தான் நாடு புதிய அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதால் பாகிஸ்தான் விரைவில் பாலைவனமாக மாறும் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்பி மோக உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

செப்டம்பர் முதல் மகளிர் உதவித்தொகை ரூ.2100.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

போலீஸில் புகார் குடுத்தது போலி விஜய் ரசிகரா? - ஆதாரத்துடன் நிரூபித்த தவெகவினர்!?

திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும்.. தேவஸ்தானம் அறிவிப்பு..!

இன்ஸ்டா வைரல் வீடியோ எதிரொலி: கூமாபட்டி மேம்பாட்டு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments