ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நாட்டை பிடித்த நிலையில் மக்கள் பலர் விமானங்கள் மூலம் தப்பி செல்லும் காட்சிகள் உலகை உலுக்கி வருகின்றன.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகி கொண்ட நிலையில் தலீபான்கள் மொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் மற்ற நாட்டவர் உயிருக்கு ஆபத்து என்பதை தாண்டி ஆப்கானிஸ்தானிலேயே வசித்த தலீபான் எதிர்ப்பாளர்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் மற்ற நாட்டு மக்களோடு ஆப்கன் மக்களுமே நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்று வருகின்றனர். இவ்வாறு தப்பி செல்ல முயன்ற ஆப்கன் மக்கள் 640 பேரை அமெரிக்க ராணுவ விமானம் காபூலில் இருந்து கத்தாருக்கு அழைத்து சென்றது. இந்த விமானத்தின் வெளிப்புறத்தில் பிடித்துக் கொண்டு தொங்கிய மூன்று பேர் வானிலிருந்து கீழே விழுந்து இறந்தார்கள்.
இந்நிலையில் விமானத்திற்கு உயிரை காத்துக்கொள்ள அமரும் இருக்கைகள், வசதிகள் ஏதுமின்றி ஒருவரையொருவர் நெருக்கியடித்து 640 பேர் அமர்ந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போர் மனதை கலங்க செய்துள்ளது.