ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்.
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட நாடு முழுவதுமே தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்பதும் இதனால் விமான நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இநிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் வலியுறுத்தியுள்ளார். யாரையும் நாடு கடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.