Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறைந்த வில் ஸ்மித்: விசாரணையை முடுக்கி விட்ட ஆஸ்கர் நிர்வாகம்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (11:04 IST)
தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம்  விசாரணையை தொடங்கியுள்ளது. 

 
94வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடந்த நிலையில் பல்வேறு பிரிவுகளில் பல படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
 
அப்போது விழா மேடையில் பேசிய நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி குறித்து உருவகேலி செய்யும் வகையில் ஜோக் அடித்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ்சை பளார் என அறைந்தார். இந்த சம்பவம் நேற்று முதலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
வில் ஸ்மித்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம்  விசாரணையை தொடங்கியுள்ளது. 
 
முன்னதாக வில் ஸ்மித் செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஆஸ்கர் நிர்வாகம் விசாரணையை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்மித் மீது ஆஸ்கர் சட்ட விதி மற்றும் கலிபோர்னியா சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments