நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விழா மேடையில் தனது மனைவியைப் பற்றி ஜோக் நடித்த நடிகரை அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிறிஸ் ராக்கை அவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வில் ஸ்மித் விருதைப் பெறுவதற்கு முன்பு நடந்தது. உண்மையில், நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார்.
ஜி.ஐ ஜேன் 2. படத்தில் கதாநாயகி தனது தலையை மொட்டையடித்தபடி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்துடன் ஜடாவை ஒப்பிட்டு கிறிஸ் ராக் கிண்டல் செய்து பேசியபோது, பார்வையாளர்கள் வரிசையில் சிரிப்பலை எழுந்தது. ஜடாவுக்கு சமீபகாலமாக சில உடல்நலப் பிரச்சனைகளால் அவரின் தலைமுடி கொட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால் இதைப் பற்றி பாடி ஷேமிங் செய்யும் விதமாக கிறிஸ் ராக் நடந்துகொண்டார்.
இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான வில் ஸ்மித் மேடைக்கே சென்று கிறிஸ் ராக்கை அறைந்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், வில் ஸ்மித்துக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துகளைக் கூறிவருகின்றனர். மேலும் உடல் ரீதியாக தாக்குதல் செய்பவர்களை இப்படிதான் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.