Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உச்சம் தொட்ட ஆஸ்கர் ரேட்டிங்: கடந்த முறையை விட 56% அதிக பார்வையாளர்கள்!

Advertiesment
உச்சம் தொட்ட ஆஸ்கர் ரேட்டிங்: கடந்த முறையை விட 56% அதிக பார்வையாளர்கள்!
, செவ்வாய், 29 மார்ச் 2022 (09:59 IST)
94வது ஆஸ்கர் விருது விழா கடந்த முறையை விட 56% அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
94வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடந்த நிலையில் பல்வேறு பிரிவுகளில் பல படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
 
அப்போது விழா மேடையில் பேசிய நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி குறித்து உருவகேலி செய்யும் வகையில் ஜோக் அடித்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ்சை பளார் என அறைந்தார். இந்த சம்பவம் நேற்று முதலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
வில் ஸ்மித்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் வில் ஸ்மித் தொகுப்பாளரை அறைந்த ஆஸ்கர் விழாவை 15.36 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறையை விட 56% அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பார்வையாளர் இன்றி விழா நடந்ததால், தொலைக்காட்சியில் விழாவைப் பார்த்தவர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவில் இல்லை. கடந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை 9.85 மில்லியன் நேரடி பார்வையாளர்கள் பார்த்தனர் என்பது கூடுதல் தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை!? – எந்தெந்த மாவட்டங்களில்?