அபுதாபியில் பொது இடங்களில் செல்போன் மூலமாகவே கொரோனா சோதனை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் என மக்கள் நடமாடும் பொது வெளிகள் அனைத்திலும் கொரோனா சோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அபுதாபியில் கொரோனா சோதனை செய்ய புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அபுதாபியின் இடிஇ ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக செல்போன் கேமராவை கொண்டே முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியும். ஸ்கேன் செய்யும்போது பச்சை வண்ணம் காண்பித்தால் நெகட்டிவ் என்றும், சிவப்பு வண்ணம் காட்டினால் பாசிட்டிவ் உள்ளதாகவும் கொள்ளப்படுகிறது.
அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்கள், கடைகள் மற்றும் பொது வெளிகளில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.