Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலிமை அப்டேட்… யாருக்காவது விடை தெரியுமா? தினேஷ் கார்த்திக் கேலி!

வலிமை அப்டேட்… யாருக்காவது விடை தெரியுமா? தினேஷ் கார்த்திக் கேலி!
, புதன், 30 ஜூன் 2021 (11:55 IST)
இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கும் மைதானத்தில் சிலர் வலிமை அப்டேட் கேட்டு போர்டு பிடித்தது வைரலாகியுள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனிக்கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகி விட்ட நிலையில் இதுவரை படத்தின் போஸ்டர் கூட வெளியிடப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அடிக்கடி வலிமை அப்டேட் கேட்டு திரை பிரபலங்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு மைதாங்களில் போர்டு பிடிப்பது தொடர் கதையானது.

இதை தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அஜித் தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ளப்பட்டதால் ரசிகர்கள் மௌனம் காத்தனர். இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் இந்தியா – நியூஸிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கும் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்டு மீண்டும் போர்டு தூக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து இப்போது தனது அதிருப்தியை தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக் ‘யாருக்காவது இந்த கேள்விக்கு விடை தெரியுமா? நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான கேள்வி இதுதான்… யாருக்கும் பதில் தெரியாதக் கேள்வியும் கூட’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை? – எதிர்பார்ப்பில் ஈரோ கால் இறுதி போட்டி!