Publish Date: Wed, 30 Jun 2021 (09:41 IST)
Updated Date: Wed, 30 Jun 2021 (09:44 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் குறைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,03,62,848 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3,98,454 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,94,27,330 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,37,064 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.