Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அபிநந்தன் இந்தியா வருவதற்கு அரை மணி நேரம் முன்பு பாகிஸ்தானில் நடந்தது என்ன?

அபிநந்தன் இந்தியா வருவதற்கு அரை மணி நேரம் முன்பு பாகிஸ்தானில் நடந்தது என்ன?
, சனி, 2 மார்ச் 2019 (14:53 IST)
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலின் போது பாகிஸ்தான் பிடியில் சிக்கிய விமான படை வீரர் அபிநந்தன் நேற்று இரவு 9 மணிக்கு அடாரி வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 
நேற்று 5 மணிக்கு ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டிய அவர், தாமதமாக 9 மணிக்கு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் முன்னர் அவரிடம் இருந்து பாகிஸ்தான் வீடியோ வாக்குமூலத்தை பெற்றுள்ளது.
 
அந்த வீடியோவில் அபிநந்தன், தன்னை பாகிஸ்தான் அதிகாரிகள் நல்ல முறையில் நடத்தியதாகவும், எனக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர் எனவும் கூறியிருக்கிறார்.
webdunia
இந்த வீடியோவில் பல கட் மற்றும் எடிட் உள்ளது. எனவே இந்த வீடியோவில் அபிநந்தன் தாமாக முன்வந்து பேசினாரா அல்லது கட்டாயப்படுத்தி பேச வைக்கப்பட்டாரா? என்பதன் சரியான விவரங்கள் தெரியவில்லை. 
 
ஆனால், பாகிஸ்தான் அரசு அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் முன்னர், அதாவது சுமார் அரை மணி நேரம் முன்னர் அபிநந்தனின் வாக்குமூல வீடியோவை, பாகிஸ்தான் அந்நாட்டு அரசு உள்ளூர் ஊடங்களில் வெளியிட்டது. இந்த வீடியோ அநாட்டு சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. 
 
உள்ளூர் ஊடங்களில் இந்த வீடியோ, எவ்வாறு இந்திய விமானி பிடிபட்டார்? என்ற தலைப்பில் வெளியானது. இதனால்தான் அபிநந்தன் 5 மணிக்கு ஒப்படைக்கப்படுவார் என கூறப்பட்டு தாமதமாக 9 மணிக்கு ஒப்படைக்கப்பட்டார் என கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடியின் மேடையில் 'முக்கிய பிரமுகருக்கு' அவமரியாதை.