Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிரம்ப் - கிம் சந்திப்பு என்ன ஆச்சு? அபிநந்தன் வரவால் மறந்தே போச்சு

டிரம்ப் - கிம் சந்திப்பு என்ன ஆச்சு? அபிநந்தன் வரவால் மறந்தே போச்சு
, சனி, 2 மார்ச் 2019 (13:06 IST)
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலின் போது பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமனப்படை வீரர் அபிநந்தன் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுதான் நேற்றைய பிரதான செய்தியாக இருந்தது. 
ஆனால், நேற்றும் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்துள்ளது. ஆம், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் இரண்டாவது முறையாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது. 
 
வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம்மும் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பில் அணு ஆயுதத்தை முழுமையாகக் கைவிடுவது மற்றும் பொருளாதார தடைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 
webdunia
ஆனால் இருதரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. வடகொரியா மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என கிம் கூற டிரம்ப் அதை ஏற்காததால் இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது. 
 
இவ்விருநாடுட்டு அதிபர்களும் முதல் முறை சந்தித்த போது அனைவரும் இதை பற்றி பேசினர். ஆனால், இம்முரை அபிநந்தனின் வரவு இவர்களின் சந்திப்பை மறக்க செய்துவிட்டது. இரண்டாம் சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளாதால் வடகொரியா மீண்டும் தங்களது அணு ஆயுத சோதனைகளை கையில் எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவின் ஆஸ்தான கூட்டணி கட்சி இப்போது திமுக பக்கம்: ஸ்டாலின் அதிரடி வியூகம்