Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடியின் மேடையில் 'முக்கிய பிரமுகருக்கு' அவமரியாதை.

Advertiesment
பிரதமர் மோடியின் மேடையில் 'முக்கிய  பிரமுகருக்கு'  அவமரியாதை.
, சனி, 2 மார்ச் 2019 (14:42 IST)
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருப்பவர் தளவாய் சுந்தரம் ஆவார். நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் தலைமையிலான ஒரு விழாவில் மோடியின் பாதுகாவலர் ஒருவர் மேடையிலிருந்த தளவாய் சுந்தரத்தை கீழே இழுத்து சென்ற சம்பவம் பெரும் ப்ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன், ராதாகிருஷ்ணன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாடாளுமன்ற புரோஹித் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
 
இதில் தமிழக அரசின் சிறப்பு  டெல்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரமும் கலந்து கொண்டார். மேடையில் ஒரு நிகழ்வாக மோடி அப்போது  திட்ட மாதிரியை பார்த்துகொண்டிருந்த போது மேடையில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் இருந்தனர்.
ஆனால் மோடியின் பாதுகாவலர் ஒருவர் தளவாய் சுந்தரத்தை கையை பிடித்து இழுத்து கீழே கூட்டிச் சென்றார். 

 
பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அனைச்சர் பொன் , ராதாக்கிருஷ்ணன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாடாளுமன்ற புரோஹித் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் இவ்விழா மேடையில் இருந்ததால் இடமில்லாமல் தான் மோடியின் பாதுகாவலர் தளவாய் சுந்தரத்தை கீழே இறக்கியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
 
இதனால் அந்தநிகழ்ச்சியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை வீழ்த்தியது அபிநந்தன்! புதிய தகவல்!