Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொந்த தங்கையை திருமணம் செய்த நபர் ;அதிகாரிகள் அதிர்ச்சி

Advertiesment
சொந்த தங்கையை திருமணம் செய்த நபர் ;அதிகாரிகள்  அதிர்ச்சி
, வெள்ளி, 17 டிசம்பர் 2021 (17:55 IST)
அரசின் நிதி உதவியைப் பெறுவதற்காக சொந்த தங்கையை ஒரு நபர் திருமணம் செய்துள்ளார் . இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் மாவட்டத்தில் துந்தலா என்ற பகுதி கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி சமூக நலத்துறை சார்பில் முதல்வரின் திருமணம் உதவி சட்டத்தின்  கீழ் சுமார் 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசின் சார்பில் ரூ. 35,000  ரோக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த திருமணம் செய்து கொண்டு நலத்திட உதவிகள் பெற்றுக் கொண்ட ஜோடிகளின்  விவரத்தை குறிப்பிட்ட அதிகாரிகள் சரிபார்த்தனர். அதில், நலத்திட்ட உதவியைப் பெறும் நோக்கில் தனது சொந்த சகோதரியை திருமணம் செய்து கொண்அ நபரைப் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், இருவரின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு