ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இருந்து காப்பாற்றப்பட்ட கரடி குட்டி ஒன்று தன்னை காப்பாற்றியவரை கட்டிப்பிடித்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திராலியாவில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகிறது. அமேசான் காட்டுத்தீயை விட பெரிய அளவில் எரிந்து கொண்டிருக்கும் இந்த காட்டுத்தீயால் மக்கள் பலர் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். பல ஆயிரக்கணக்கான காட்டு விலங்குகள் அழிந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் அபூர்வமான கோலா கரடிகள் இரண்டாயிரத்திற்கும் மேல் அழிந்துள்ளதாக கூறப்படுகிறது.
காட்டுத்தீயை அணைக்கவும், கானுயிர்களை மீட்கவும் பலர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் வீரர் ஒருவர் காட்டில் நெருப்பில் சிக்கிய கரடி குட்டி ஒன்றை காப்பாற்றியுள்ளார். பத்திரமாக மீட்கப்பட்ட கரடி குட்டி அந்த வீரரை விட்டு செல்லாமல் அவரது கால்களை இறுக்கி பிடித்து கொள்வதும், அவரை பின் தொடர்வதுமாக இருந்துள்ளது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போர் மனதை உருக செய்துள்ளது.