ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அந்நாட்டு பிரதமரை முட்டாள் என திட்டுய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் காட்டுப் பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது,. இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்த காட்டுத் தீயில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில் கொபார்க்கோ நகரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் சென்றுள்ளார். அப்போது அங்கே காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், ”அடுத்த முறை இங்கிருந்து ஒரு ஓட்டு கூட உங்களால் பெற முடியாது, நீங்கள் ஒரு முட்டாள்” என திட்டியுள்ளதாக கூறப்படுகிறது
புத்தாண்டை முன்னிட்டு ஸ்காட் மாரிசன், தனது சொகுசு பங்களாவில் இருந்து சிட்னி துறைமுகத்தில் வான வேடிக்கைகளை பார்த்ததாக குற்றம் சாட்டி பிரதமரை முட்டாள் என திட்டியதாக கூறப்படுகிறது.