கடந்த டெஸ்ட் ஆட்டங்களில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லாபஸ்சாக்னே ஆஸ்திரேலியாவின் அடுத்த கேப்டனாக வாய்ப்பிருப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் விளையாட தடை செய்யப்பட்டபோது ஆஸ்திரேலிய அணி தடுமாற தொடங்கியது. ஆஷஸ் தொடரில் ஸ்மித்திற்கு மாற்றாக களமிறங்கிய மார்னஸ் லாபஸ்சாக்னே தொடர்ந்து தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். நடந்து முடிந்த 5 டெஸ்ட் ஆட்டங்களில் 4 ல் சதம் வீழ்த்தியுள்ளார்.
லாபஸ்சாக்னே குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “தற்போதைய கேப்டன் தனது பதவியிலிருந்து விலகும்போது லாபஸ்சாக்னே சிறந்த தேர்வாக இருப்பார். அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள்ளாக லாபஸ்சாக்னேவை கேப்டனாக்குவது குறித்த பேச்சு தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.