அமெரிக்கா வாஷிங்டன் மாகாணத்தில் வெத்து துப்பாகியை வைத்து வங்கியை கொள்ளையடிக்க முயன்ற 86 வயது மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன் வாஷிங்டனில் வங்கி ஒன்றில் வாக்கிங் குச்சியுடன் உள்ளே நுழைந்த 86 வயது மூதாட்டி ஒருவர் துப்பாக்கியை நீட்டி அனைவரையும் மிரட்டியுள்ளார். விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார். துப்பாக்கியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்தனர். யாருக்கும் எதுவும் ஆகாமல் அந்த பாட்டியை கைது செய்தனர். அப்போது அந்த பாட்டி அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அந்த பாட்டியை மீட்டு மருத்துச்வமனையில் அனுமதித்து முதலுதவி அளித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
பாட்டி வைத்திருந்த துப்பாக்கியை சோதனை செய்த போது துப்பாக்கியில் குண்டு இல்லாதது தெரியவந்துள்ளது. விசாரணையில், பாட்டியின் கணக்கில் இருந்த 400 டாலர் வங்கியால் ஏதோ காரணத்திற்காக அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதை திரும்ப பெறவே வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்துள்ளார். மேலும் தவறுதலாக கைப்பட்டு யாரையையும் சுட்டு விட கூடாது என்பதற்காக குண்டு இல்லாமல் துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார்.