அமெரிக்காவில் காணப்படும் Armillaria Ostoyae என்று அழைக்கப்படும் தேன் காளான்கள் பிற உயிரினங்களை அழித்து உயிர் வாழும் ஒன்றாம்.
உலகிலேயே மிக பழமையான தாவரமாக தேன் காளான் கருதப்படுகிறது. இவை அமெரிக்காவின் ஒரிகன் மலை பகுதியில் சுமார் 2,200 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகிறதாம். இவை அனைத்தும் ஒரே ஒரு மூலக்கூற்றில் இருந்து பரவுகிறதாம்.
இந்த காளான்கள் உருவாகி சுமார் 2400 முதல் 8000 ஆண்டுகள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேன் காளான் மெதுவாகதான் படரும். ஆனால், அது பரரும் வழியில் உள்ள தாவர உயிரினங்களை அழித்துவிடும்.
இந்த காளானால் பல மரங்களையும் அழிக்க கூடிய சக்தியுள்ளதாம். இலையுதிர் காலத்தின் போது மஞசள் நிறத்தில் மாறி தங்களது இருப்பை காட்டிக்கொள்ளும். பின்னர் வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.
இந்த காளான் வகை 1988 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஒரிகன் மலைப்பகுதியில் உள்ள காளான்களை எல்லாம் ஒன்று சேர்த்தால் சுமார் 7500 டன் முதல் 35,000 டன் வரை இருக்குமாம்.
இவை மரங்கள் மற்றும் தாவரங்களையே அழிப்பவை. இவற்றால் அழியும் மரங்கள் மறுசுழற்சி மூலமாக மண்ணிலேயே உரமாவதால் இதனால் பெரிய ஆபத்து ஏதும் இல்லை என கூறப்பட்டுள்ளது.