Publish Date: Fri, 24 Nov 2017 (12:12 IST)
Updated Date: Fri, 24 Nov 2017 (12:14 IST)
ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்த பெண்மனி அதே பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவருடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் மேகன் கொட்டார்ஸ்கி(28). அந்த பள்ளியில் கடந்த 2014ம் ஆண்டு முதல், இந்த வருடம் நவம்பர் 10ம் தேதி வரை பணிபுரிந்து வந்தார். அதன் பின் அவர் வேலையை விட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவருடன் அவர் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல், 13 வயது முதல் 18 வயது வரையிலான பல மாணவர்களுடன் அவர் பாலியல் தொடர்பான உறவு வைத்திருந்ததாக செய்தி வெளிவந்துள்ளது.
இதனத் தொடர்ந்து இவரை கைது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.