Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியல்! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

Advertiesment
பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியல்! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
, வியாழன், 20 டிசம்பர் 2018 (07:30 IST)
உலகிலேயே பத்திரிக்கையாளருக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5ஆம் இடம் கிடைத்துள்ளதக வெளிவ்நதிருக்கும் செய்தி பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லைகளற்ற பத்திரிக்கையாளர்கள் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் எவை எவை என்ற ஆய்வறிக்கையை வெளியிடுவதுண்டு. அந்த வகையில் 2018ஆம் ஆண்டுக்கான புதிய ஆய்வறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் கடத்தப்படுவது, கொல்லப்படுவது உள்ளிட்ட வகைகளின் அடிப்படையில் இந்த கணக்கீடு எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு கடந்த மாதம் வரை உலகம் முழுவதும் 80 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

webdunia
அதன்படி உலகிலேயே பத்திரிக்கையாளருக்கு மிக ஆபத்தான நாடு என்ற பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது. சிரியா 2-ம் இடத்திலும், மெக்சிகோ 3-ம் இடத்திலும் ஏமன் 4-வது இடத்திலும், இந்தியா 5வது இடத்திலும் உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 6 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் நடைபெறாத நாடுகளில் அதிக பத்திரிக்கையாளர் படுகொலை செய்யப்பட்டிருப்பது இந்தியாவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மு.க.ஸ்டாலின் குழப்பிய குட்டை: உருவாகிறது 3வது அணி