Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடாமல் துரத்தும் 10 ஆண்டு சர்ச்சை: ஹர்பஜன் –சைமன்ட்ஸ் மீண்டும் வார்த்தைப் போர் !

விடாமல் துரத்தும் 10 ஆண்டு சர்ச்சை: ஹர்பஜன் –சைமன்ட்ஸ் மீண்டும் வார்த்தைப் போர் !
, திங்கள், 17 டிசம்பர் 2018 (08:20 IST)
2008 ஆம் டெஸ்ட் தொடரின் ஹர்பஜன் சைமண்ட்ஸ் இடையே எழுந்த பிரச்சனையை இப்போது மீண்யும் கிளறியிருக்கிறார் சைமண்ட்ஸ்.

2008 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது வீரர்கள் இடையே வார்த்தைப் போர்களும் ஸ்லெட்ஜிங்களும் தினமும் நடைபெற்று வந்தன. ஆனால் ஹர்பஜன் சைமண்ட்ஸ் இடையிலான சர்ச்சை மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

அதற்குக் காரணம் ஹர்பஜன் சைமனட்ஸை இனவெறியோடு குரங்கு என்று சொல்லி கேலி செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுதான். இந்தக் குற்றச்சாட்டை ஹர்பஜன் மறுத்தார். ஆனாலும் ஐசிசி அவருக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதித்தது. பின்னர் நடைபெற்ற விசாரணையில் சச்சின் உள்ளிட்டோர் ஹர்பஜனுக்கு ஆதரவாக சாட்சியளித்ததால் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இந்த விவகாரம் அப்போது அத்தோடு முடித்து வைக்கப்பட்டது.

சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த சைமண்ட்ஸ் ‘அந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின்னர் என்னை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த ஹர்பஜன் என்னிடம் தனியாகப் பேசவேண்டுமெனக் கூறினார். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நான் ஏதேனும் காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் எனக் கூறி அழ ஆரம்பித்தார்.பின்னர் இருவரும் கைகுலுக்கி சமாதானம் ஆனோம்’ எனக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் ‘இதுவரை சைமண்ட்ஸை நல்லக் கிரிக்கெட்டர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் நல்ல கதாசிரியர் என்று இப்போதுதான் அறிந்துகொண்டேன். 2008-ல் அவர் கூறியக் கட்டுக்கதைகளையே 2018 லும் கூறுகிறார். 10 வருடத்தில் உலகம் எங்கோ சென்றுவிட்டது நண்பா…கொஞ்சமாவது வளருங்கள்’ என அறிவுரைக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை ஹாக்கி: முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற பெல்ஜியம்