Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் பணிபுரியும் 7.5 லட்சம் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (11:57 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கையால் 5 முதல் 7.5 லட்சம் இந்தியர்கள் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே பல திடுக்கிடும் சட்டங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அந்நாட்டவரிடம் அமெரிக்க பொருட்களை வாங்குங்கள் என்றும் அமெரிக்கர்களை மட்டுமே பணி அமர்த்துங்கள் என்ற கொள்கையை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறார். இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்பவதற்கு ‘எச்-1 பி’ விசா கட்டாயமாகும். இந்த விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது. ஒபாமா அதிபராக இருந்த காலத்தில்,‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு எச்-4 விசா மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார். இந்த சலுகையை வாபஸ் பெறவும் டொனால்டு டிரம்ப் தலைமையிலான தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
டிரம்ப் தலைமியிலான அரசு, வேலை வாய்ப்பில் அமெக்கர்களுக்கு முன்னுரிமை வழங்ப்பட வேண்டும் நோக்கில் எச்-1 பி விசா நீட்டிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை அமெரிக்க அரசு நிறைவேற்றினால் 5 - 7.5 லட்சம் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் அபாயம் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments