Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணம் நடந்த 18 மணி நேரத்தில் உயிரிழந்த மணப்பெண்

Advertiesment
திருமணம் நடந்த 18 மணி நேரத்தில் உயிரிழந்த மணப்பெண்
, ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (14:04 IST)
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் திருமணம் நடந்த நிலையில் அடுத்த 18 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் ஹார்போர்ட் நகரில் வசித்து வருபவர் டேவிட் மோஷர் (35). இவரும் ஹீத்தர் லிண்ட்சே (31) என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஒரு சமயத்தில் இவ்விருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 23-ஆம் லிண்ட்சேவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற பரிசோதனை செய்த போது லிண்ட்சேவுக்கு மார்பக புற்று நோய் இருப்பது தெரியவந்தது. 
 
ஆனாலும் தனது காதலில் இருந்து டேவிட் பின் வாங்கவில்லை. லிண்ட்சே தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த செப்டம்பரில் புற்றுநோய் அவரின் மூளை மற்றும் நுரையீரலுக்கு பரவியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் லிண்ட்சே தனது கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இதையடுத்து மருத்துவமனை படுக்கையில் படுத்தபடியே டேவிடை லிண்ட்சே திருமணம் செய்து கொண்டார். இந்த நெகிழ்ச்சிகரமான சம்பவத்தை பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கண் கலங்கினார்கள். திருமணம் நடந்த அடுத்த 18 மணி நேரத்தில் லிண்ட்சே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரின் காதலர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை; எடப்பாடி பழனிசாமி