Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போப் ஆண்டவரின் இறுதி சடங்கை நடத்திய போப்! – வரலாற்றிலேயே முதல்முறை!

Pope Benedict Funeral
, வெள்ளி, 6 ஜனவரி 2023 (09:14 IST)
முன்னாள் போப் ஆண்டவரான 16ம் பெனடிக்டின் இறுதி சடங்கை நடப்பு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நடத்தினார்.

உலகம் முழுக்க உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் மதத்தலைவராக வாட்டிகனில் போப் ஆண்டவர் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு போப் இறந்த பின்னரும் அடுத்த போப் ஆண்டவரை கார்டினல்கள் சேர்ந்து தேர்ந்தெடுப்பது வழக்கம்.

முன்னதாக போப் இரண்டாம் ஜான் பால் இறந்த பின் போப்பாக பதவியேற்றவர் 16ம் பெனடிக்ட். ஆனால் 8 வருடங்களுக்கு பின் இவர் உடல்நலம் காரணமாக போப் பதவியிலிருந்து விலகிய நிலையில் போப் பிரான்சிஸ் தற்போதைய போப் ஆண்டவராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 31, 2022ல் 16ம் பெனடிக்ட் வயது மூப்பால் காலமானார்.

அவரது உடல் கடந்த 2ம் தேதி முதல் வாடிகன் செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், கார்டினல்கள் உட்பட 60 ஆயிரம் பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தற்போதைய போப் பிரான்சிஸ் சக்கர நாற்காலியில் வந்து 16ம் பெனடிக்ட் அடக்கத்திற்கு இறுதி சடங்குகளை நடத்தினார்.

முன்னால் போப் ஒருவருக்கு நடப்பு போப் இறுதி சடங்குகள் செய்வது வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்பட்டுள்ளது. அவரது உடல் புனித பீட்டர் தேவலாயத்தி அடியில் அமைந்துள்ள ”வாடிகன் க்ரோட்டஸ்” என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழில் அதிபராகும் TTF வாசன்… பைக் ரைடர்களுக்கான புதிய கடை!