Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிறிஸ்துமஸ்ஸை உக்ரைனுக்கு உதவி கொண்டாடுங்கள்! – போப் வேண்டுகோள்!

Advertiesment
கிறிஸ்துமஸ்ஸை உக்ரைனுக்கு உதவி கொண்டாடுங்கள்! – போப் வேண்டுகோள்!
, வியாழன், 15 டிசம்பர் 2022 (09:49 IST)
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் நிலையில் போப் பிரான்சிஸ் புதிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பலரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, வீட்டை பிரம்மாண்டமாக அலங்கரிப்பது என கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் கிறிஸ்துமஸை சிக்கனமாக கொண்டாடி மீத தொகையை உக்ரைனுக்கு உதவ அளிக்குமாறு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “உக்ரைன் மக்கள் போரால் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பசியாலும், குளிராலும் வாடி வருகிறார்கள். அவர்கள் இதயங்களில் மகிழ்ச்சியும், அமைதியும் பொங்கும் வகையில் கிறிஸ்துமஸ் அமைய அனைவரும் பண்டிகை செலவுகளை சிக்கனப்படுத்தி போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஏ.. எப்புட்றா..?” கர்ப்பமாக இருப்பது தெரியாமல் குழந்தை பெற்ற பெண்! – நடுவானில் ஆச்சர்யம்!