Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு எம்.பி யின் விலை 48 கோடி ரூபாய் –விளையாடும் பணநாயகம்

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (09:59 IST)
இலங்கை அதிபரால் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சே தனது பெரும்பாண்மையை நிரூபிக்க ரனில் ஆதரவு எம்.பி.க்களிடம் குதிரை பேரம் நடத்துவதாக குற்றச்சாட்டி எழுந்துள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகி ரனிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவைப் புதிய பிரதமராக நியமித்தார் சிறிசேனா.

ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை எம்.பிக்களின் ஆதரவு ரனிலுக்கே இருப்பதால் நாடாளுமன்றத்தை வரும் நவம்பர் 16-ந்தேதி வரை முடக்கினார். இதற்கிடையில் புதிய பிரதமராக ராஜபக்சே பதவிப்பிரமானம் ஏற்றது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியாவை சந்தித்த119 ரனில் ஆதரவு எம்.பிக்கள் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் அதிபர் சிறிசேனா தரப்பு நாடாளுமன்றத்தைக் கூட்ட மறுத்துவிட்டது. நாடாளுமன்றத்தைக் கூட்டினால் பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாது என்ற அச்சத்தில் அதிபர் தரப்பு நாடாளுமன்ற முடக்கத்தை கூடுமானவரை தள்ளிப்போட பார்க்கிறது. மேலும் இந்த கால இடைவெளியில் ரனில் ஆதரவு எம்.பிக்களை தம் பக்கம் இழுக்கும் பேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறது.


இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரனில் ஆதரவு எம்.பி, பலித ரங்கே பண்டாரா தனது பொபைல் போனுக்கு வந்த குறுஞ்செய்தியைக் காட்டி பேசினார். அந்த செய்தியில் ‘Dear sir both can be do what u ask from me today morning’ என்ற வாக்கியம் இருந்தது. இந்த குறுஞ்செய்தி குறித்து விளக்கமளித்த அந்த எம்.பி ‘ராஜபக்சே தரப்பினர் என்னை தொடர்பு கொண்டு எங்களுக்கு ஆதரவு அளித்தால் உங்களுக்கு 28 லட்சம் அமெரிக்க டாலர்களை(48 கோடி ரூபாய்) தருவதாகவும் மேலும் அமைச்சர் பதவியும் தருவதாகக் கூறினர். அதை கொழும்பு புத்தர் கோயில் வந்து பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தனர். அதை மறுத்த நான் என் வீட்டுக்கு வந்து கொடுத்தால் உங்கள் ஆலோசனையை நான் பரிசீலிப்பதாகக் கூறினேன். அதற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாகத்தான் அவர்கள் அந்த குறுஞ்செய்தியை அனுப்பினர்.’ எனக் கூறினர்.

இதையடுத்து மேலும் சில எம்.பிக்களிடமும் இதேப் போன்ற பேரங்கள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஒரு சிலர் இது சீனாவின் தலையீட்டால் நடக்கும் சதி என்றும் புகார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments