Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கினார் அதிபர் சிறிசேனா

Advertiesment
A surperise decision is taken by srilankan president sirisena
, வியாழன், 1 நவம்பர் 2018 (11:22 IST)
இலங்கை அதிபரல் நவம்பர் 16-ந்தேதி வரை நாடாளுமன்றம் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த முடிவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் விக்ரமசிங்கே இடையேயான மோதலின் விளைவாக பிரதமர் ரணில் விக்ரமிசிங்கேவை பதவிநீக்கம் செய்துவிட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார் சிறிசேனா. சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையின் ஒருசில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவிலும் எதிர்ப்பு பலமாக எழுந்தது.
 
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமராக தொடர்வாதாக அறிவித்தார். தன்னை நீக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை எனவும் அறிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டினால் மெஜாரிட்டியை நிரூபிக்க தயார் என்றும் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் ராஜகபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்களும், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தை கூட்டினால் ரணில் மெஜாரிட்டியை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அதிபர் சிறிசேனாவால்  நாடாளுமன்றம் திடீரென முடக்கப்பட்டது. 
 
ராஜபக்சேவும் பிரதமராக பதவியேற்றார்.நவம்பர் மாதம் 16-ந்தேதி வரை நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அறிவித்திருந்த சிறிசேனா. இப்போது திடீரென நாடாளுமன்ற முடக்கத்தை தளர்த்தியுள்ளார். நேற்று சபாநாயகரை சந்தித்து சிற்சேனா ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு – ப சிதம்பரம் கைதா?