இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவிநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராஜபக்சே இலங்கை பிரதமராக பதவியேற்றதில் இருந்தே இலங்கையில் அரசியல் குழப்பநிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டினால் ரணில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்பிக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென இன்று ரணிலுக்கு ஆதரவளித்த 4 எம்பிக்கள் ராஜபக்சே பக்கம் தாவிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பதவி ஆசை காரணமாக 4 எம்பிக்களும் ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரும் நவம்பர் 16 வரை இலங்கை நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள நிலையில் அதன்பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கும் தயாராக பிரதமர் ராஜபக்சே இருப்பதாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன