ஒரே நேரத்தில் சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்

திங்கள், 3 செப்டம்பர் 2018 (11:43 IST)
லிபியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு சிறையிலிருந்து தப்பித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவில் தீவிரவாதிகளால் பொதுமக்களுக்கு தொடர் அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது. கடந்த வாரம் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 47 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் இருந்து வருகிறது.
 
இந்நிலையில் லிபியாவில் அப்பன் ஜாரா என்ற சிறையில் உள்ள கைதிகள் அங்கு கலவரத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிவிட்டனர். 400 கைதிகள் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
கைதிகளின் தாக்குதலுக்கு பயந்து அவர்கள் தப்பியோடியபோது காவலர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்லை. 400 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடிய சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அபிராமிக்கு அதிக பிரியாணி கொடுத்து வளைத்தேன் - கள்ளக்காதலன் வாக்குமூலம்