Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 157 விசாரணை கைதிகள் மரணம்; அதிர்ச்சியூட்டும் தகவல்

தமிழகத்தில் 157 விசாரணை கைதிகள் மரணம்; அதிர்ச்சியூட்டும் தகவல்
, வியாழன், 1 பிப்ரவரி 2018 (15:30 IST)
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் லாக்-அப்பில் 157 விசாரணை கைதிகள் இறந்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவல் நிலையங்களில் விசாரணை கைதிகள் சித்ரவதை செய்ய்ப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் விசாரணை என்ற படத்தில், விசாரணைக் கைதிகள் படும் துன்பங்களை, மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்திருந்தார். அந்த படத்தை பாத்தவர்களுக்கு இது புரியும்.
 
விசாரணைக் கைதிகள் லாக் அப் மரணம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை அந்தந்த மாநிலங்களில் நடந்த  லாக்அப் மரணம் குறித்து விவரங்களை கேட்டு பெற்று நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
 
அதன்படி கடந்த ஜனவரி 29-ந்தேதி இது தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் நடந்தது. அப்போது தமிழக அரசின் உள்துறை செயலாளர் சார்பில், லாக்-அப் மரணம் தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 2012-ல் இருந்து 2016 வரை 5 ஆண்டுகளில் தமிழக காவல் நிலையங்களில் லாக்-அப்பில் 157 விசாரணை கைதிகள் இறந்திருக்கிறார்கள் புள்ளி விவரம் வெளியிடப்பட்டது.  இது பலரை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் ; 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி : அதிர்ச்சியில் பாஜக