உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யாவின் தனியார் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் இதில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து இரு நாடுகளிடையே போர் நடந்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனில் மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் ஆகியுள்ளனர்.
தற்போது உக்ரைனின் பாக்முத் நகரின் கிழக்கே ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கூடுதல் ஆயுதங்கள் வழங்க வேண்டுமென நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுவரையிலான போரில் ரஷ்யாவின் வாக்னர் குழுவை சேர்ந்த 30 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 90 சதவீதம் பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட நபர்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.