Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார் மீது மோதிய அரசு பேருந்து! குழந்தை உட்பட 4 பேர் பலி! – கடலூரில் கொடூர விபத்து!

Accident
, திங்கள், 13 பிப்ரவரி 2023 (09:11 IST)
கடலூர் மாவட்டத்தில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவட்டி கூட்டு ரோடில் கார் ஒன்றில் இரண்டு பெண்கள் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பயணம் செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த அரசு பேருந்து கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதிக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணிக்க பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அரசு பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் பெரிய நிலநடுக்கம் வராது! ஏன் தெரியுமா? – நிபுணர்கள் சொன்ன காரணம்!