Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக கொரோனா எண்ணிக்கை 3.51 கோடியாக உயர்வு

உலக கொரோனா எண்ணிக்கை 3.51 கோடியாக உயர்வு
, ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (06:54 IST)
உலக கொரோனா எண்ணிக்கை 3.51 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடியாக அதாவது 35,122,290ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10.37 லட்சமாகவும் அதாவது 1,037,524 எனவும், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக அதாவது 26,117,241 எனவும், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,267ஆகவும் உயர்ந்துள்ளது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,600,846 எனவும், பலியானோர் எண்ணிக்கை 214,277 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 4,818,509 எனவும் உயர்ந்துள்ளது. இதேபோல் 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,547,413 எனவும், பலியானோர் எண்ணிக்கை 101,812 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 5,506,732 எனவும் உயர்ந்துள்ளது. இதேபோல்
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,906,833 எனவும், பலியானோர் எண்ணிக்கை 146,011 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 4,248,574 எனவும் உயர்ந்துள்ளது
 
ரஷ்யா, கொலம்பியா, பெரு, ஸ்பெயின், அர்ஜெண்டினா, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன அதிபர் ஷி ஜின்பிங் கனவு காணும் புதிய பொருளாதார அமைப்பு சாத்தியமாகுமா?