ஈரான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 22,000 பேர்களை விடுதலை செய்ய அந்நாட்டின் மத தலைவர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் அரசுக்கு எதிராக போராடிய 22,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆம்னி என்ற பெண் உயிர் இழந்ததை அடுத்து இந்த போராட்டம் வெடித்தது என்பதும் இதனால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஈரான் நாட்டின் நீதித்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த வாரம் ரம்ஜான் நோன்பு தொடங்கவுள்ளதை அடுத்து கைது செய்யப்பட்ட 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க மத தலைவர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
இதனை அடுத்து இன்றே கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.