Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறுபடியும் முதல்ல இருந்தா… சூரிய வைத்து மீண்டும் விடுதலை ஷூட்டிங்கை நடத்தும் வெற்றிமாறன்!

மறுபடியும் முதல்ல இருந்தா… சூரிய வைத்து மீண்டும் விடுதலை ஷூட்டிங்கை நடத்தும் வெற்றிமாறன்!
, ஞாயிறு, 12 மார்ச் 2023 (09:59 IST)
கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் நடந்தது. இதையடுத்து படம் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

விடுதலை படத்தின் இரண்டும் பாகங்களின் ஷூட்டிங்கும் முடிந்ததாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது 3 நாட்கள் சூரியை வைத்து சில காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக மதுரையில் இருந்து சூரி, சென்னைக்கு திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் க்ளாஷ் விடும் கார்த்தி? – ஜப்பான் vs மாவீரன்!