Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரியை ஹீரோவாக வைத்து மீண்டும் படம் தயாரிக்கும் விடுதலை தயாரிப்பாளர்!

சூரியை ஹீரோவாக வைத்து மீண்டும் படம் தயாரிக்கும் விடுதலை தயாரிப்பாளர்!
, ஞாயிறு, 12 மார்ச் 2023 (11:17 IST)
விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ள நிலையில் அடுத்தடுத்தும் சூரியை கதாநாயகனாக வைத்து படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒரு படத்தை கூழாங்கல் என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்க, சிவகார்த்திகேயன் அந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையோடு தொடங்கியது. இந்த படத்தில் மலையாள நடிகையான அன்னா பெண் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் சூரி, இதன் பின்னர் தொடர்ந்து ஹீரோவாகவும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மீண்டும் சூரியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த படத்தை அவரே இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எல்ரெட் குமார் ஏற்கனவே முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாரன்ஸ் & நயன்தாரா நடிக்கும் படத்தை தயாரிப்பது யார்? திடீரென்று நடந்த மாற்றம்!