Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அளவில் 21 லட்சத்தை நெருங்கிய கொரோனா: தினமும் ஒரு லட்சம் அதிகரிப்பால் பரபரப்பு

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (07:38 IST)
உலக அளவில் 21 லட்சத்தை நெருங்கிய கொரோனா:
உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி, லட்சக்கணக்கான மனிதர்களை பாதித்தும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கியும் வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் திணறி வருகின்றனர்
 
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கவும் குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கவும் இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்பதால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் உலக அளவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தை நெருங்கி உள்ளது. அதாவது 20,82,822 பேர் கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நேற்று 19,97,666 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனா பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,34,603 ஆக உயர்ந்துள்ளது என்பதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,10,046 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.480 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

ஒரே ஒரு புயல்.. மொத்த தண்ணீர் கஷ்டமும் தீர்ந்தது.. ஏரிகளின் கொள்ளளவு நிலவரம்..!

வைகை, பல்லவன், வந்தே பாரத் ரயில்கள் ரத்து.. பயணிகள் கடும் அதிருப்தி..!

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. இறங்கி வரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தரிசனத்திற்கு வரும் பிரபலங்கள் அரசியல் பேசக்கூடாது: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments