Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11.16 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!

11.16  கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
, ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (06:53 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 11.16  கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 111,638,369 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,471,432  பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 86,807,253  பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 22,329,091ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,706,114 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 509,872 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 18,899,185 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,991,091 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 156,339 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,687,538 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,139,148 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 246,006 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 9,067,939 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதாம் ஹுசைன் மகள் பேட்டி: "எனது கணவரை கொல்ல ஆதரவளித்தேன்"