Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்கம்பத்தில் மோதி ’ ஏர் இந்தியா’ விமானம் விபத்து !

Advertiesment
மின்கம்பத்தில் மோதி ’  ஏர் இந்தியா’ விமானம் விபத்து !
, சனி, 20 பிப்ரவரி 2021 (20:49 IST)
தரையிரங்கும்போது மின்கம்பத்தில் ஏர் இந்திய விமானம் மோதியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

ஏர் இந்திய விமானம் தோகாவில் இருந்து 64 பயணிகளுடன்  ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்தது.

இன்று மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது, தரையிரங்குவதற்காக சிக்கல் கிடைத்ததும் ஓடிபாதையில் தரையிரங்கியது.

அப்போது, எதிர்பார்க்காத வகையில் பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த விமானம்  ஓடுகளத்தில் ஓரமாகச் சென்று அங்கு ஓரத்தில் நின்றிருந்த மின்கம்பத்தில் இறக்கை மோதியது. இதில் இறக்கைகள் சேதமடைந்தது. அந்த மினகம்பமும் சரிந்தது. பின்னர் விபத்து ஏற்படாமல் விமானி அதே இடத்தில் விமானத்தை நிறுத்தினார்.

விமானத்தில் உள்ளிருந்த ஊழியர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கப்பட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரப்பானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்