டிஜிட்டல் தளங்களில் (OTT) வெளியிடப்படும் படங்களும் 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என தகவல்.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச மதிப்பு வாய்ந்த விருதுகளில் ஒன்று ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விருது விழாவை உலகமே எதிர்நோக்கும்.
ஆஸ்கர் பட்டியலில் ஒரு படம் பரிந்துரையில் இடம் பெற வேண்டும் என்றால், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் குறைந்தது 7 நாட்களாவது அந்த படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனாவால் இந்த முக்கிய விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், படங்கள் ஏதும் வெளியாகவில்லை. எனவே, டிஜிட்டல் தளங்களில் (OTT) வெளியிடப்படும் படங்களும் 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என ஆஸ்கர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் டிஜிட்டல் தளங்களில் (OTT) வெளியிடப்படும் படங்களும் 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது கலைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.