ஊரடங்கிற்கு பிறகே 10 ஆம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கமுடியும் என தலைம்னைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கு 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முக்கியம்.அதனால் தேர்வு நிச்சயம் நடைபெரும். ஒருநாளைக்கு 3 மணிநேரம்தான் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.ஒருநாள் விட்டு ஒருநாள் தேர்வு எப்படி எழுதலாம் என்பது குறித்து முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று, அந்தப் பணிகளை நிறைவேற்றுவோம்.
தேர்வு எழுதாததவர்களுக்கு மறுவாய்ப்பு வழக்கப்படும். தனியார் பளியைப் பொறுத்தவரை கட்டாய வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய ஒரு நிலை ஏற்கவுள்ளது. தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும், மாணவர்களுக்கு யூடியூப், பொதிகை சேனல் மூலமாக கற்றுக்கொள்ள வழி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.