Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்வம் நிலைக்க செய்யவேண்டிய வாஸ்து முறைகள் என்ன...?

Advertiesment
செல்வம் நிலைக்க செய்யவேண்டிய வாஸ்து முறைகள் என்ன...?
உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும்போது மேற்குப் பக்கம் தலைவைத்துப் படுக்கவேண்டும். அதாவது நீங்கள் தூங்கும்போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்கவேண்டும்.
இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்டு ஒரு பச்சை நிற துணியில் வடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்போதும் வைத்துக்கொள்ளவும்.
 
பசுமையான வெர்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பண சம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிற்கு செல்லும் போதும் உடன்  வைத்துக்கொள்ளவும்.
 
நிலக்கரி தன ஆகர்ஷன சக்தி உடையது. எனவே அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும். ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
 
தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
 
எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு “ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி” என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
 
முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்” என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
 
வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால்  பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (11-12-2019)!